News August 16, 2024

சேலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 8, 2026

சாதனை படைத்த திருநங்கைகளுக்கு கௌரவம்!

image

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திருநங்கைகளைக் கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் “முன்மாதிரி திருநங்கை விருது” வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான இந்த விருதினைப் பெறத் தகுதியுள்ள திருநங்கைகள், வருகின்ற ஜனவரி 18-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

சேலத்தில் பொங்கல் பரிசு: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகளோ அல்லது சிக்கல்களோ இருந்தால்1967, 1800-425-5901 அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்கள் 0427-2415784, 7338721702, 0427-245943 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

தாரமங்கலம் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த தறித் தொழிலாளி சுரேந்திரன், (42). இவர் கிருஷ்ணம் புதுார் ஆவின் பாலகம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வந்த, பைக், சுரேந்திரன் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த சுரேந்திரனை, மக்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!