News February 16, 2025

சேலம்: இளம்பெண் பாலியல் பலாத்காரம்… கைது!

image

சேலம், தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி கிராமம் மேட்டுமாரனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (36), கல் உடைக்கும் தொழிலாளி. இவர் 2010ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த ஒரு இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை நேற்று கிருஷ்ணகிரி அருகே தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 9, 2025

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், இளங்கலை மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறதாகவும், தகுதியுள்ள மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 31-12-2025க்குள் http://umis.tn.gov.in/ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News December 9, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News December 8, 2025

சேலம்: முதல் நிலை சரிபார்த்தல் – ஆட்சியர் தகவல்!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 2026 தேர்தலில் சேலத்தில் பயன்படுத்தப்படும் 8,412 வாக்குப்பதிவு எந்திரங்கள், 4,888 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கு அளிக்கும் கருவிகளை பெங்களூர் பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், வருகின்ற டிசம்பர்-11ம் தேதி முதல்நிலை சரிபார்த்தல் பணி நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!