News April 19, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலிசார் விவரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
Similar News
News September 16, 2025
சேலம்: தவெக தலைவர் விஜய் வருகை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார சுற்றுப்பயணம் சேலத்தில் மேற்கொள்ள உள்ள நிலையில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரிடம் அனுமதி கேட்டு சேலம் மத்திய மாவட்ட த.வெ.க செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று மனு வழங்கியுள்ளனர்.
News September 16, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் நேற்று (15.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக கோவை-ஜெய்ப்பூர்-கோவை ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் (06181/06182) அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.16- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அக்.16, 23,30,நவ.06 தேதிகளில் கோவை- ஜெய்ப்பூர், அக்.19, 26,நவ.02,09 தேதிகளில் ஜெய்ப்பூர்- கோவை சிறப்பு ரயில்கள் இயக்கம்.