News March 9, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 9 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2025
மார்ச் 21- ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்!

சேலம் மேற்கு கோட்ட அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம், வரும் மார்ச் 21- ஆம் தேதி மதியம் 03.00 மணிக்கு நடக்க உள்ளது. புகார்களை ‘அஞ்சல் கண்காணிப்பாளர், மேற்கு கோட்டம், சேலம்-636005’ எனும் முகவரிக்கு வரும் மார்ச் 18- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, பதிவு தபால், விரைவு தபால் போன்ற சேவை தொடர்பான் புகார்களையும் கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பலாம்.
News March 10, 2025
சேலம்: அரசு தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலை

தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு முதல் B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.8500 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். கடைசி நாள் 11.3.25 ஆகும். விண்ணப்பிக்க <
News March 10, 2025
மாநகராட்சி ஆணையர் நியமனம்: அன்புமணி வலியுறுத்தல்

சேலம் மாநகராட்சி ஆணையராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர் பணியிடங்களும் ஐ.ஏ.எஸ். நிலை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும், அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆணையாளர்களாக நியமிக்க வேண்டும் என பா.ம.க. மாநில தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.