News March 11, 2025
சேலம்: இதை செய்யலனா ரேஷன் அட்டை கேன்சல் ஆகிடும்

கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளாமல் உள்ளார்கள். அவர்களுக்கு தங்கள் e-KYCயை முடிப்பதற்கான கடைசி தேதி மார்ச்.25 ஆகும். இந்த செயல்முறை ஆன்லைனிலோ அல்லது ரேஷன் கடைகளிலோ மேற்கொள்ளலாம். இதற்கு ஆதார் அட்டை, மொபைல் எண் கட்டாயம் தேவை”. இதை ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 12, 2025
சேலம் எம்பிக்கு புதிய பொறுப்பு

திமுக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோருடன், கட்சியின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் எம்.பி.யுமான டி.எம்.செல்வகணபதி மற்றும் அருண் நேரு எம்.பி, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., நாக நந்தினி, ராஜா தமிழ்மாறன் ஆகிய பேச்சாளர்களும் இணைந்து பங்கு பெறுவர் என தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
News March 12, 2025
தபால் சேவை மூலம் பாஸ்போர்ட் வழங்குவதில் சேலம் முதலிடம்

சேலத்தில் தபால் நிலைய சேவை மையம் மூலம் 8 ஆண்டுகளில் 1,47,771 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மண்டல அளவில் சேலம் முதலிடம் பெற்றுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் 120 பேர் வரையில் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 12, 2025
சேலம்: ராமேஸ்வரம்- ஹூப்ளி ரயில் ரத்து உத்தரவு வாபஸ்!

நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியே செல்லும் ராமேஸ்வரம்- ஹூப்ளி சிறப்பு ரயில்கள் (07355, 07356) 3 நாட்கள் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 13, 20, 27 தேதிகளில் இந்த சிறப்பு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில் நிலையத்தில் இந்த ரயில்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.