News April 10, 2025
சேலம் அரசு பேருந்தில் அட்டூழியம் 3 பேர் கைது

சேலத்தில் இருந்து வெள்ளிமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஏறிய மூன்று பேர், உள்ளே செல்லாமல் படியிலேயே நின்றுகொண்டு, நடத்துனர் செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன்,அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மாணவர் விஜய் (20), ரீகன் (21) மற்றும் பெயிண்டர் விக்ரம் (23) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
Similar News
News April 19, 2025
பழங்குடியினர், மலைவாழ் மீனவ மக்கள் விண்ணப்பிக்கலாம்!

“மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மீனவ மக்கள்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறுவதற்கு உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மேட்டுர் அணை அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 96773- 50979, 89400-00482 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்”.
News April 19, 2025
சேலத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப்.21 அன்று காலை 10.00 மணியளவில் தொடங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0427- 2401750 அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரில் அணுகியும் பயன்பெறலாம். இதை அரசு வேலைக்கு தயாராகும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News April 19, 2025
பெங்களூரு-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரெயில் (06585) இன்று 19-ஆம் தேதி (சனிக்கிழமை) எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை வழியாக 8.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.