News April 23, 2025
சேலம்: அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.
Similar News
News November 24, 2025
மேட்டூர் அருகே ரயில் இன்ஜின் மோதி விபத்து!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் சரக்கு பெட்டியில் நிலக்கரி லோடு ஏற்றி சென்று அவற்றை இறக்கிவிட்டு மீண்டும் ரயிலின் பெட்டியை மாற்றி பொருத்தும் பணி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக ரயில் இன்ஜின், புறப்பட தயாராக இருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் யாரும் இல்லாதகாரணத்தால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
News November 24, 2025
சேலம்: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

சேலம் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News November 24, 2025
BREAKING: சேலத்தில் இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் பிருந்தாதேவி விடுமுறை அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)


