News April 25, 2025
சேலம்: அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் தூய்மை பாரத திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Similar News
News September 19, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

ரயில் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக, நாளை மறுநாள் (செப்.20) மயிலாடுதுறை- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (16811) மல்லூர் வரையிலும், சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16812) மல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும். இந்த ரயில்கள், மல்லூர்-சேலம் இடையே இயக்கப்படமாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 19, 2025
போதையில் வாகனம் ஓட்டிய 154 பேரின் லைசென்ஸ் ரத்து!

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, சேலம், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மதுப்போதையில் வாகனம் ஓட்டிய 154 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக 3 மாதத்திற்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்று வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 18, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (18.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.