News October 25, 2024

சேலம்: அதிமுக நகர செயலாளர் காலமானார்

image

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட தம்மம்பட்டி அதிமுக நகர செயலாளர் பதவி வகித்து வந்தவர் குமரன். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பால் இறந்தார். இவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தம்மம்பட்டியில் உள்ள பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அதிமுக கட்சிக்கு மிகவும் உழைத்தவர் என பொதுமக்கள் கூறினார்கள்.

Similar News

News October 20, 2025

சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News October 20, 2025

சேலத்தில் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை!

image

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் 2-ஆம் முதல் பல்வேறு இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 11 மருத்துவ முகாம்களில், மொத்தம் 17,230 பேருக்குப் பல்வேறு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கியப் பரிசோதனைகளாக 16,510 பேருக்கு ரத்தப் பரிசோதனையும், 11,429 பேருக்கு இ.சி.ஜி. பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

News October 20, 2025

சேலம் வனச்சரகங்களில் தனிப்படையினர் ரோந்து!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, மேட்டூர், கருமந்துறை, வாழப்பாடி, தம்மம்பட்டி ஆகிய வனச்சரகங்களில் வன ஊழியர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிப்படைகள் மூலம், மான் மற்றும் முயல் வேட்டையில் யாரேனும் ஈடுபடுகிறார்களா? எனத் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!