News March 17, 2025
சேலத்தில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் அருள். இவரது 2 வயது மகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, 5 ரூபாய் நாணயத்தை சிறுவன் விழுங்கியது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவர்கள் தினேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் கொண்ட குழுவினர், அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை அகற்றினர். பெற்றோர்களே உஷார். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Similar News
News March 18, 2025
சுகாதார நிலையங்களில் 36 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் 36 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை சேலம் மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து வரும் மார்ச் 24- ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், பழைய நாட்டாண்மைக் கட்டிட வளாகம், சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
News March 18, 2025
ஒரு வாரத்தில் மட்டும் ரூ.3.53 லட்சம் அபராதம் விதிப்பு

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரத்தில் 225 இடங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் 260 வாகனங்கள் மற்றும் 400 கடைகளிலும், 586 கல்வி நிறுவனங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் 3.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்.
News March 18, 2025
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 41 வாகனங்கள் நாளை ஏலம்

சேலம், பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்திய 41 வாகனங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனை அடுத்து 41 வாகனங்களை நாளை காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. சேலம் சர்க்கார் கொல்லப்பட்டிஉணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏலம் நடைபெறும்.