News April 13, 2025
சேலத்தில் 25,000 பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்க ஏற்பாடு

சேலம் குரங்குச்சாவடியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஐயப்ப ஆசிரமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.14) அதிகாலை 04.00 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமத்துடன் கோயில் முழுவதும் காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜைச் செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் மற்றும் லட்டு சுமார் 25,000 பக்தர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு.
Similar News
News October 26, 2025
சேலம்: அரசு ஐ.டி.ஐ.,யில் சேர ஆட்சியர் அழைப்பு!

சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கையில்; சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில், 2025ம் ஆண்டு நேரடி சேர்க்கை வரும், அக்.31 வரை நடக்க உள்ளது. அதில் கடைசலர், டிஜிட்டல் போட்டோகிராபர், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன் போன்ற பிரிவுகளில் சேரலாம். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
News October 26, 2025
பாமக சார்பில் போராட்டம்! ராமதாஸ் அறிவிப்பு

சேலத்தில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், வன்னிய சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தர வலியுறுத்தி, வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இந்தப் போராட்டம் இறுதிப் போராட்டமாக இருக்க வேண்டும், எனவே தமிழக அரசு உடனடியாக இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கூறினார்.
News October 26, 2025
சேலம்: B.E / B.Tech டிகிரி போதும் வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <


