News April 22, 2025
சேலத்தில் வேலை வாய்ப்பு முகாம்!

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். இந்த முகாமானது ஏப்.25- ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News September 17, 2025
சேலத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சேலம், கோவை, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 37 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 17) மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News September 17, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

ஈரோடு-ஜோக்பானி (பீகார்) இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் வாராந்திர சிறப்பு ரயில் வரும் செப்.25- ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சேலம், காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
News September 17, 2025
சேலம்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

சேலம் பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <