News August 15, 2024
சேலத்தில் வேலைவாய்ப்பு: நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை சேலம் வேலைவாய்ப்பு அலுவகத்தில் நடைபெற உள்ளது. 3000 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 18, 2025
சேலம்: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

சேலம், ஓமலூரில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
News September 18, 2025
திமுகவின் இரட்டை நிலைப்பாடு-இபிஎஸ் விமர்சனம்

சேலம் ஓமலூரில் செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக மாறியதும் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டையும் தி.மு.க கொண்டிருப்பதாகக் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது விமர்சித்தவர்களுக்கு இப்போது ரத்தினக் கம்பளம் விரிப்பதாகவும் அவர் சாடினார்.
News September 18, 2025
சேலம்: பயிற்சியுடன் ரூ.12,000 வேண்டுமா?

சேலம் மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <