News August 25, 2024

சேலத்தில் வெங்காய விலை கிடுகிடு உயர்வு

image

சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர் சந்தைகள், வெளி மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 40 முதல் ரூ. 45 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 150 முதல் 200 டன் வரை தான் பெரிய வெங்காயம் வருகிறது. தரத்திற்கு ஏற்ப 50 முதல் ரூ.56 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.65 வரை விற்பனையானது.

Similar News

News October 27, 2025

சேலம்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

சேலத்தில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. (SHARE பண்ணுங்க)

News October 27, 2025

சேலம்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

சேலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit

News October 27, 2025

சேலம் அருகே தந்தையை கொன்று ஆற்றில் வீசிய மகன்!

image

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான கோட்டையூர் பரிசல் துறையில் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் (70) என்ற முதியவரின் உடல் காவிரி ஆற்றில் மிதந்தது.போலீசார் விசாரணையில் இவரது மகன் கோவிந்தராஜ், சங்கரனைக் கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியது தெரியவந்தது; இது குறித்து கொளத்தூர் போலீசார் கொடுத்த தகவல் அடிப்படையில் கர்நாடக மாதேஸ்வரன் மலை போலீசார் விசாரணை!

error: Content is protected !!