News February 26, 2025
சேலத்தில் விஜய் சேதுபதியுடன் ரசிகர்கள் செல்ஃபி

பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.25) சேலத்திற்கு வருகை தந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன், ரசிகர்களுக்கு செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News February 26, 2025
சேலம் பிப்ரவரி26 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் பிப்ரவரி 26 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 10 மணி வேளாண் நிதிநிலை அறிக்கை சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த கருத்துக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2) 10 மணி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சேலம் வருகை.3) காலை 11 மணி புரட்சி பாரதம் கட்சியினர் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.4) மாலை 6:00 மணி சிவன்- அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை.
News February 26, 2025
போலீஸ் பறிமுதல் செய்த 121 வாகனங்கள் ஏலம்

சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் 11 இருசக்கர வாகனம் 110 மொத்தம் 121 வாகனங்கள் சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று ஏலம் விடப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு பத்தாயிரம் முன்பணம் செலுத்தி ரசித்து பெற்றுக் கொள்ள வேண்டும் போலீஸ் அதிகாரி அறிவித்துள்ளார்.
News February 26, 2025
சேலம் வந்த பிரபல நடிகரின் மகன்

சேலத்தில் நேற்று (பிப்.25) நடைபெற்று வரும் பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏவின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்ஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது விஜய்யின் மகனுக்கு ஜி.கே.மணி, சால்வை மற்றும் மாலை அணிவித்து கௌரவித்தார். விழாவில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.