News March 4, 2025

சேலத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

image

பழனிவேல் என்பவர் பனமரத்துப்பட்டி காந்தி நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மவுலீஸ்வரன் (வயது 13) 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று கோழி இறைச்சி சுத்தம் செய்யும் எந்திரத்தை மவுலீஸ்வரன் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவனை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 4, 2025

சேலம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு 

image

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெர்சலை கட்டுப்படுத்தும் வகையில் சேலத்திலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்பட உள்ளது என்றும் அதன் பிறகு அங்கிருந்து தாம்பரம் எழும்பூருக்கு வேறு பஸ்களில் பயணம் செய்யலாம் என சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இதில் சாதாரண பேருந்துகள் மற்றும் குளிர்சாதன பேருந்துகள் அடங்கும்.

News March 4, 2025

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

image

விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025 ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது- சேலம் மாவட்ட ஆட்சியர்

News March 4, 2025

சேலம் பிப்ரவரி 4 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் பிப்ரவரி 4 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 11 மணி தமிழ்நாடு உடல் உழைப்பு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️ மாலை 5 மணி தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ▶️மாலை ஆறு மணி கோட்டை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் ▶️இரவு ஏழு மணி கோட்டை ஓம் சக்தி விநாயகர் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம்.

error: Content is protected !!