News March 18, 2024
சேலத்தில் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை

கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 38.2 டிகிரி செல்ஸியஸ்; 100.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் நாள்தோறும் காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
சேலம்: டிச.18ல் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில்: மதவழி சிறுபான்மைரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், சீக்கியர்கள் மற்றும் தமிழர்கள் ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக டிச.18 ஆட்சியர் அலுவலகத்தில் சிறும்பான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையினர் கலந்து கொள்ளலாம் என வலியுறுத்தியுள்ளார்.
News December 10, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக நலனின் அக்கறை கொண்ட, வகுப்பு கலவரம் மற்றும் வன்முறையில் பொதுமக்களை பாதுகாப்பவர்களுக்கு, ஆண்டுதோறும் வீர புரஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2026ம் ஆண்டிற்கு விருது பெற விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை https://awards.tn.gov.in இணையதளத்தில் டிசம்பர-15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி வலியுறுத்தியுள்ளார்.
News December 10, 2025
சேலம்: டிசம்பர் 11 கடைசி நாள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சிறப்பு திருத்த முறை 2026 வாக்காளர் பட்டியலில், வாக்காளர் கணக்கிட்டு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர்-11ம் தேதிக்குள் வழங்க வேண்டும், என ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சேலத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, திரும்ப வழங்காதவர்கள் உடனடியாக வழங்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


