News April 4, 2025
சேலத்தில் மாணவி தற்கொலை!

எடப்பாடி அருகே முத்தையம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தனியார் நீட் பயிற்சி மையத்தில். கடந்த 10 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், தன்னால் தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் கடந்த 31ஆம் தேதி விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News April 5, 2025
சனி, ஞாயிறுகளில் வரி வசூல் மையங்கள்!

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய வழி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம். மேலும், பொதுமக்கள் நலன் கருதி வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 5, 2025
சேலத்தில் இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி!

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைக்கடிகாரம் மற்றும் கடிகாரம் பழுதுபார்க்கும் 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கு நேரடியாகவோ (அ) இந்த <
News April 5, 2025
சேலத்தில் உலகிலேயே மிகப்பெரிய நந்தி!

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளாளக்குண்டம் கிராமத்தில் உலகிலேயே மிகப்பெரிய நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. 45 அடி உயரம் கொண்ட அதிகார நந்தி சிலையின் வயிற்று பகுதியில் பக்தர்கள் சென்று தியானம் செய்ய தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகார நந்திச் சிலையை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.