News August 24, 2024
சேலத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை

சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (19), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை நேற்று ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பெயரில் குமரேசன் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 31, 2025
சேலம்: குழந்தைகள் பாதுகாப்பு எண் அறிவிப்பு!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக “Child Line – 1098” தொடர்பு எண் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த எண் மூலம் ஆபத்தான சூழலில் சிக்கியுள்ள குழந்தைகள் உடனடியாக மீட்கப்படுவார்கள். குழந்தைகள் குறித்த பிரச்சினைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் தயங்காமல் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
News August 31, 2025
சேலம் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஆக.31)- ஆம் தேதி அன்று சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் (06127) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 31, 2025
சேலம் வழியாக குஜராத்துக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

வரும் செப்.01- ஆம் தேதி சேலம் வழியாக விழுப்புரத்தில் இருந்து குஜராத் மாநிலம், உத்னாவுக்கு சிறப்பு ரயில் (06159) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.