News May 15, 2024
சேலத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு

சேலம் நெய்க்காரப்பட்டி மேம்பாலத்தின் வழியாக சரக்கு வேன் ஒன்றில் தகர அட்டைகள் கொண்டு சென்ற போது பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென தகர அட்டை சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
Similar News
News December 6, 2025
பாதுகாப்பு வளையத்தில் சேலம் மாவட்டம்!

இன்று (டிச. 6) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சேலம் மாநகரம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில் நேற்று சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சேலத்தில் உள்ள தனியார் விடுதிகள் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் சோதனை!
News December 6, 2025
கெங்கவல்லி: காதல் திருமணம் செய்த பெண தற்கொலை!

சேலம்: கெங்கவல்லி அருகே, புனல்வாசலை சேர்ந்தவர் சரத் குமார், (25) இவர், பெரம்பலுார் சேர்ந்த திவ்யலட்சுமி (22) என்பவரை இரு ஆண்டுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் நேற்று வீட்டில் – தனியாக இருந்த திவ்லட்சுமி, தூக்கிட்டு உயிரிழந்தார். திருமணமான இரு ஆண்டில் தற்கொலை செய்ததால், கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிந்து, ஆத்துார் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.
News December 6, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகராட்சியின் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.


