News August 26, 2024
சேலத்தில் பூண்டு விலை கிடுகிடு உயர்வு

சேலம் மாவட்டம் ஒமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.450ஐ தொட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக 100 டன் வர வேண்டிய சந்தைக்கு, 20 டன் அளவு மட்டுமே பூண்டு வந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மலை பூண்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.
Similar News
News October 29, 2025
சர்வதேச முதியோர் தின விழா கொண்டாட்டம்!

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள நேச கரங்கள் ஆதரவு முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. முதியோர் தினம் என்பது நம் சமூகத்தின் மூத்த குடிமக்களுக்கு அன்பு நன்றி செலுத்துவது என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி சென்று முதியோர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்து அவர்களுடன் உணவு அருந்தி வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்.
News October 29, 2025
சேலம்: ரயில்வே துறையில் வேலை – 2424 Ticket Clerk பணியிடங்கள்!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
பதவி: Ticket Clerk.
மொத்த பணியிடங்கள்: 2424
கல்வித் தகுதி: 12th Pass போதும்.
சம்பளம்: ரூ.21,700 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 29, 2025
சேலம்: பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், காவல்துறை இயக்குநர் உத்தரவின்படி இன்று (29.10.2025) சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், இ.கா.ப., நேரில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


