News March 19, 2024
சேலத்தில் பாமக போட்டி?

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News February 11, 2026
சேலம்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

சேலம் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
BREAKING: சேலத்தில் நாளை ஆட்டோக்கள் ஓடாது!

மத்திய அரசின் தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.ஐ.டி.யு , எல்.பி.எஃப் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் நாளை(ஜன.12) ஆட்டோக்கள் ஓடாது எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு, வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது.
News February 11, 2026
சேலம் வாக்காளர்கள் கவனத்திற்கு!

சேலம் மக்களே இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! ‘ECI


