News March 19, 2024

சேலத்தில் பாமக போட்டி?

image

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Similar News

News October 28, 2025

சேலம் கலெக்டர் ஆபிசில் கஞ்சாவுடன் வந்த பெண்!

image

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த 51 வயது பெண் முத்துலட்சுமியிடம் கஞ்சா பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது. கெங்கவல்லி அருகே மூலப்புதூர் பகுதியைச் சேர்ந்த இவர், அப்பகுதியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். போலீஸார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று அவருக்கு எப்படி கஞ்சா கிடைத்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 28, 2025

சேலத்தில் 1.18 லட்சம் நூதன முறையில் மோசடி!

image

சேலம் கன்னங்குறிச்சி மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை இவரது மனைவி ஜெயலட்சுமி இவர் கடந்த 2ஆம் தேதி அழகாபுரம் இந்தியன் ஏடிஎம் வங்கியில் 2000 எடுத்துள்ளார். அப்பொழுது அவருக்கு பின்னால் முகமூடி அணிந்த ஒருவர் அவரின் ரகசிய எண்ணை பார்த்து அவரின் ஏடிஎம் அட்டையும் நூதன முறையில் மாற்றி உள்ளார். இதனை அடுத்து அவரது அக்கவுண்டில் இருந்து 1.18 லட்சம் மாயமானது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் விசாரணை!

News October 28, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!