News April 29, 2025

சேலத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை!

image

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறினார். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என உளவுப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் போலீஸ் சரகத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை. முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா தெரிவித்துள்ளார்.

Similar News

News February 23, 2026

சேலத்தில் இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்!

image

சேலம் மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்த சுதா என்பவர், தனது செல்போனில் சமூக வலைத்தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராம் மூலம் லோகநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சந்தித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதனை கணவர் பாக்கியராஜ் கண்டித்த நிலையில், நேற்று சுதா வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 23, 2026

சேலம்: உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா?

image

சேலம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்படுகிறது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி முதல் 2 மி.லி வரை இத்திரவம் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதைப் புகட்டிப் பயன்பெறுமாறு ஆட்சியர் பிருந்தா தேவி அறிவுறுத்தியுள்ளார்.

News February 23, 2026

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று (பிப்.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க தேவைப்பட்டால், கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!