News June 27, 2024

சேலத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழாக்கத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் அரசு மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ணாபுரத்தை சேர்ந்த சரசு (52) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News October 19, 2025

சேலம்: மின் பிரச்சனையா இங்கு போங்க!…

image

சேலம் மாநகர் மக்களே மின் தொடர்பான பிரச்சனையா, கரண்ட் பில் அதிகமாக வருகிறதா? புதிய இணைப்பு பெறுவதில் ஏதேனும் சிக்கலா? மின் தொடர்பான வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அக்.22ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு அன்னதானப்பட்டி வள்ளுவர்நகர் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

News October 19, 2025

சேலம் கோட்டத்தில் 35 லட்சம் பேர் பயணம்!

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் “கடந்த 16ம் தேதி முதல் நேற்று 18ம் தேதி வரை 35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று (19ம் தேதி) 16 லட் சம் பேர் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் சேலம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு பல கோடி வருவாய் கிடைத்துள்ளது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 19, 2025

சேலம்: பட்டாசு வெடிக்க தடை! வனத்துறையினர் எச்சரிக்கை

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வனச்சரக அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில், பட்டாசு வெடித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் ஏற்காடு, குப்பனூர், டேனிஷ்பேட்டை, உள்ளிட்ட வனப்பகுதி மலைப்பாதையில் பட்டாசு வெடிக்க முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!