News March 29, 2024
சேலத்தில் நாளை முதலமைச்சர் பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மலையரசன், சேலம் தொகுதி வேட்பாளர் செல்வ கணபதி ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக நாளை மாலை 6 மணி அளவில் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அண்ணா திடலில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் வாக்கு கேட்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News December 12, 2025
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

சேலம் மக்களே புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? அல்லது உங்க ரேஷன் கார்டுல பெயர் சேர்த்தல், செல்போன் நம்பர் மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமா? கவலை வேண்டாம் வரும் டிச.13ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்துத் தாலுகா அலுவலகங்களிலும் இதற்கான குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் கொள்ள மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
சேலத்தில் பெண் கொலை; சிக்கிய ஆதாரம்!

சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி (34) என்ற பெண் கொலை செய்து நாடகமாடிய வழக்கில் உதயசரண் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற உறவில் இருவரும் இருந்த வந்த நிலையில் பாரதி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்ததாக உதயசரண் வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்தநிலையில் பாரதி வீட்டை ஒட்டிய சாக்கடையில் மொபைல் போனை கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News December 12, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


