News March 20, 2025
சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் நாளை (மார்ச் 21) தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ,பட்டப்படிப்பு, பொறியியல்,செவிலியர், போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News March 28, 2025
சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்கள்

வரும் ஏப்.09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கும், ஏப்.10, 17, 24, மே 01 தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் (01005/01006) இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மார்ச் 30- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு தொடங்கும்.
News March 28, 2025
மக்களே உஷார்..சேலத்தில் அரங்கேறும் புதிய மோசடி!

சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில், வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கைப்பேசியில் யாரேனும் தொடர்பு கொண்டு தங்களுக்கு பரிசு விழுந்துள்ளது.அதற்கு குறிப்பிட்ட தொகையை அனுப்புங்கள் என சொன்னாலும், Google Pay பின் நம்பர் போன்ற எதையும் சொல்லக்கூடாது என வலியுறுத்தினர். சைபர் கிரைம் புகார்களுக்கு அழையுங்கள் 1930. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து மோசடியிலிருந்து விழிப்புணர்வுடன் இருங்கள்.
News March 27, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.27 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.