News September 13, 2024
சேலத்தில் செப்.30 வரை கால அவகாசம்

அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் செய்திக்குறிப்பில், அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் செப்.30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த பின்னா் முன்னணி நிறுவனங்களின் நோ்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டுவரும் சோ்க்கை உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
Similar News
News December 1, 2025
சேலம்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News December 1, 2025
சேலம்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
News December 1, 2025
சேலம்: ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து பலி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேர்ந்த மாபுபலி மனைவி, சர்பன் பீபி(72), நேற்று காலை கேரளா செல்ல பெங்களூரு–எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க முயன்றபோது, 9-வது பெட்டியில் முன்பதிவு செய்யப்பட்ட உறவினர்களுடன் சேர முயற்சித்தபோது ரெயில் புறப்பட்டு தண்டவாளத்தில் விழுந்து இறந்தார். ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


