News March 27, 2025
சேலத்தில் சிறப்பு மிக்க 5 முருகன் கோயில்கள்!

சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்புமிக்க முருகன் கோயில்கள் உள்ளன. முத்துமலை முருகன் கோயில், காவடி பழனி ஆண்டவர் கோயில், காளிப்பட்டி முருகன் கோயில், கந்தாஸ்ரமம் திருக்கோயில், குமரகிரி தண்டாயுதபாணி கோயில் ஆகியவை சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். இதில், முத்துமலை முருகன் கோயிலில் உலகின் மிக உயரமான முருகன் சிலை உள்ளது. முருகன் 146 அடியில் பிரம்மாண்டமாக காட்சியளித்து அருள் புரிந்து வருகிறார். SHARE IT!
Similar News
News November 21, 2025
பார்சல்களுக்காக முதல் முறையாக தனி ரயில்

தெற்கு ரயில்வே சார்பில் பார்சல்களை மட்டும் அனுப்புவதற்கு தனியாக 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் வரும் டிச.12-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. மங்களூரு-சென்னை ராயபுரம் வரை இயக்கப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த பெட்டிகளில் தலா 23 டன் பார்சல் ஏற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வரும் நவ.22- ஆம் தேதி முதல் நவ.24- ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், ஓசூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு சுமார் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.