News August 9, 2024
சேலத்தில் குழந்தை கடத்தல்

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாள்கள் ஆன குழந்தையை கடத்தி சென்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த தங்கதுரை, வெண்ணிலா தம்பதிகளுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை பெண் ஒருவர், அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சிசிடிவி காட்சி வீடியோக்களை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News July 11, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை, குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து, அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் <
News July 11, 2025
சேலம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளமான: https://mtsaed.tn.gov.in/evaadagai எனும் தளத்தை அணுகலாம்.(SHARE)
News July 10, 2025
சேலம்: 8 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் இயங்கும் கோவை – மன்னார்குடி செம்மொழி – கோவை தினசரி எக்ஸ்பிரஸ் (16616/16615), கோவை – திருப்பதி – கோவை எக்ஸ்பிரஸ் (22616/22615), கோவை – நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (22668/22667), கோவை – ராமேஸ்வரம் – கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் (16618/16617) ஆகிய 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.