News May 5, 2024

சேலத்தில் கடும் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (மே.5) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

Similar News

News April 20, 2025

கஞ்சா ஹோம் டெலிவரி: தாய், மகன் கைது!

image

சேலம் மாவட்டம், ஓமலூரில் கஞ்சாவை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ததாக தாய், மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூங்கொடி, அவரது மகன் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகன் கஞ்சா விற்ற சம்பவம் ஓமலூர் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

News April 20, 2025

சேலம் வழியாக ப்ரௌனிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

வரும் ஏப்.26, மே 03, 10, 17, 24 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து ப்ரௌனிக்கும், மறுமார்க்கத்தில், ஏப்.29, மே 06, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ப்ரௌனியில் இருந்து போத்தனூருக்கும் வாராந்திர கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06055/06056) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

News April 20, 2025

சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் 382 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!