News March 16, 2025

சேலத்தில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதை மற்ற இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News March 17, 2025

சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண்.56106 ஈரோடு – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் நாளை 18.03.2025 ஈரோடு கரூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது; அன்று கரூரில் இருந்து காலை 09.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 17, 2025

“ஹெட்லைட்டை மாற்றலாம் தலையை மாற்ற முடியாது”

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (மார்ச். 16) தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில், ஹெட்லைட்டை மாற்றலாம், தலையை மாற்ற முடியாது என விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை, மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சேலத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை 5வயது வரை உள்ள 2,62,674 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் உள்ள ஆரம்ப,துணை மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படும். இதை குழந்தை வைத்துள்ள மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். 

error: Content is protected !!