News March 31, 2025
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் (மார்ச்.31) இன்றைய முக்கிய நிகழ்வுகள். ▶️ காலை 6 மணி முதல் ரமலான் பண்டிகை ஒட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை. ▶️காலை 9 மணி மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய சிறைச்சாலை முன்பு நினைவுச்சுடர் ஓட்டம் துவக்கம். ▶️காலை 10 மணி சூரமங்கலத்தில் எடப்பாடியார் நீர் மோர் பந்தல் திறப்பு. ▶️காலை 10 மணி சீலநாயக்கன்பட்டியில்அச்சு குழுமத்தை அமைச்சர் பார்வையிடுகிறார்.
Similar News
News April 4, 2025
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வரலாறு

தென்னிந்நிய சினிமா வளர்ந்தது கோடம்பாக்கம் என்றாலும், அதனின் தொடக்கம் சேலம் தான். ஆம், சேலத்தை மையமாகக் கொண்ட ’மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தில் இந்தி, சிங்களம் உட்பட பல மொழிகளில் 150 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. மலையாள சினிமாவின் முதல் பேசும் படத்தை தயாரித்த பெருமையும் இந்நிறுவனத்தையே சாரும். ஏற்காடு சாலையில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் தான் இந்திய சினிமா பரிணாமத்தின் நுழைவு வாயில்.
News April 4, 2025
டிக்கெட் இன்றி பயணம்: ரூ.22.14 கோடி அபராதம் வசூல்!

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 3.30 லட்சம் பயணிகளிடம் இருந்து ரூ.22.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 16% அதிகம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் முறையாக டிக்கெட் எடுத்து உரிய வகுப்பில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
News April 4, 2025
சேலம் மாணவி மரணம்: அரசுக்கு இபிஎஸ் கேள்வி!

“நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது;நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி