News September 14, 2024

சேலத்தில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் சேலத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ➤ மேட்டூர் அணைக்கு 13,217 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. ➤ கொளத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தில், மக்கள் அச்சமடைந்துள்ளனர். ➤ சேலத்தில் 162 மையங்களில் நடைபெற்ற குருப் 2 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Similar News

News July 8, 2025

ஏற்காடு ரயிலை கடத்துவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

image

ஈரோடு-சென்னை சென்ட்ரல் இடையே தினசரி இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில், சேலம் மற்றும் காட்பாடி வழியாகச் செல்கிறது. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சென்னை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது. அதில் ஏற்காடு ரயிலை கடத்தப்போவதாக மிரட்டினார்.இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சபரீசன் என்பவர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

News July 8, 2025

டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு சேலத்தில் வரும் 31ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். ஷேர் செய்யுங்கள்.

News July 8, 2025

அடுத்தடுத்து 2 வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

image

கருப்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனபால், இன்று மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.5,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல், தனபால் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ரகுநாத் என்பவர் வீட்டிலும் ரூ.5,000 திருடு போனது. அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!