News August 24, 2024
சேலத்தில் இன்றைய தலைப்பு செய்திகள்

➤சங்ககிரி அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ➤எடப்பாடியில் உள்ள உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. ➤மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,501 கன அடியிலிருந்து 6,467 கன அடியாக குறைந்துள்ளது. ➤தொடர் விடுமுறை காரணமாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Similar News
News November 16, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.16) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 16, 2025
JUST IN: சேலத்தில் இப்படி ஒரு இடமா? மறக்காம விசிட் பண்ணுங்க!

சேலம்: கோரிமேடு குரும்பப்பட்டி அருகே உள்ள காப்புக்காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நகர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, குடும்பத்துடன் அமர்ந்து பேசும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் புற்களால் வேயப்பட்ட கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.ரூ.10 நுழைவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறக்காம விசிட் பண்ணுங்க!
News November 16, 2025
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான (கணினி சார்ந்த தேர்வு) தேர்வு இன்று (நவ.16) காலை, மாலை நடக்கிறது. இத்தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 2,416 பேர் 7 மையங்களில் எழுதவுள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


