News November 21, 2024

சேலத்தில் இன்று மின்தடை

image

சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி, சங்ககிரி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (நவ.21) மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக கலெக்டர் அலுவலகம், GH, சங்ககிரி, அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில், கோர்ட் ரோடு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம்.

Similar News

News December 11, 2025

வாழப்பாடி: முருகன் பெயரில் மத வெறியா? பரபரப்பு போஸ்டர்!

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவதில் ஏற்பட்ட விவகாரம், தமிழக முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்..
அமைதி நிலவும் தமிழ்நாட்டில்.. முருகன் பெயரில் மதவெறியா? என குறிப்பிட்டு வாழப்பாடி பகுதியில் பொது இடங்களில் கருப்பு நிறத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் யார்? எந்த அமைப்பு? என உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 11, 2025

சேலம்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

சேலம் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News December 11, 2025

ஓமலூரில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகள்!

image

சேலம்: ஓமலூர் காவல் நிலையத்தில் சிக்கனம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரும் காதலித்து வந்த நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதே போல முத்துநாயக்கன்பட்டி சேர்ந்த விஜய்-மணிமேகலை மற்றும் பச்சினம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் அம்மாபேட்டை சேர்ந்த பூமிகா என மூன்று காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

error: Content is protected !!