News August 9, 2024
சேலத்தில் இன்று மின்தடை

சிங்கிபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாழப்பாடி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
சேலத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்!

சேலத்தில் இன்றைய (செப்.14) இறைச்சி மற்றும் மீன் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆட்டிறைச்சி கிலோ ரூ.800, பிராய்லர் கோழிக்கறி கிலோ ரூ.200, நாட்டுக் கோழி கிலோ ரூ.480, மீன் வகைகளில் ரோகு ரூ.200, கட்லா ரூ.220, ஆத்துபாறை ரூ.220 என விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் பகுதி இறைச்சி என்ன விலை மக்களே கமெண்ட் பண்ணுங்க!
News September 14, 2025
சேலம் மக்களே இனி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News September 14, 2025
சேலம் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன் தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, அவர் 20 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.