News April 10, 2025

சேலத்தில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, பல இடங்களில் பரவலாக மழையும் பெய்தது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE IT!

Similar News

News December 7, 2025

தாரமங்கலத்தில் துடிதுடித்து பலி!

image

இடைப்பாடி அருகே கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள்(70). இவரது பேரன் அஜித்குமார் (25), கூலி தொழிலாளி. இவர்கள், நேற்று காலை சொந்த வேலையாக டூவீலரில் இளம்பிள்ளை புறப்பட்டனர். தாரமங்கலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சின்னம்மாள், பேரன் கண் முன்பே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2025

சேலம் வழியாக செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு!

image

ஹைதராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு,திருப்பூர், போத்தனூர் வழியாக கொல்லத்திற்கு வாராந்திர ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.ஜனவரி 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி சனிக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து இரவு 11.10க்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.10க்கு கொல்லம் சென்று அடைகிறது. அதேபோல கொல்லத்திலிருந்து 19ஆம் தேதி காலை 10.45 க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5.30க்கு ஹைதரபாத் போகிறது

News December 7, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்

error: Content is protected !!