News March 18, 2025

சேலத்தில் அமையயுள்ள DOME THEATER

image

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் பகுதியில் 95 இருக்கைகளுடன் கூடிய, டோம் தியேட்டர் (DOME THEATER) கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பார்வையாளரைச் சுற்றி, 360 டிகிரியிலும் காட்சி ஓடும் வகையில் இந்த தியேட்டர் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த திரையரங்கிற்காக திரைப்பட ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Similar News

News March 19, 2025

சேலம் மாநகராட்சியில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்

image

சேலம் மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் 36 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை பதிவு செய்ய இங்கே <>கிளிக்<<>> செய்து, பூர்த்திச் செய்து வரும் மார்ச் 24- ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், பழைய நாட்டாண்மைக் கட்டிட வளாகம், சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதை ஷேர் செய்யவும்.

News March 19, 2025

சேலம் GH-ல் பாலியல் தொல்லை? 3 மணி நேர தொடர் விசாரணை

image

சேலம் அரசு மருத்துவமனையில் தூய்மை மேற்பார்வையாளராக பணியாற்றிய 30 வயது பெண்ணுக்கு, ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கலெக்டர் மற்றும் கமிஷனரிடம் புகார் வழங்கப்பட்டது. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அறிக்கை சென்னைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

குழந்தை திருமணம் – கலெக்டர் எச்சரிக்கை

image

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனையும், ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபை கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!