News March 20, 2024
சேலத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Similar News
News November 28, 2025
சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை

சேலம் காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: செய்தி, ஆன்லைன் கடன் ஆப்களில் அதிகரித்து வரும் மோசடிகளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவித்துள்ளது. அறியாத பயன்பாடுகள் மூலம் கடன் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்கள், அடையாள ஆவணங்கள், வங்கி விவரங்களை பகிர்வது பெரிய அபாயத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறியது. மேலும் இது குறித்து தகவல் அளிக்க 1930 தொடர்பு கொள்ளலாம்.
News November 28, 2025
ஒளவையார் விருது பெற தகுதியானவர் விண்ணப்பிக்கலாம்

ஒளவையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பெண்களுக்கான ஒளவையார் விருது மகளிர் தினத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் https// awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர்-31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு!
News November 28, 2025
புயல் எதிரொலி சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து!

புயல் எதிரொலியாக இன்று (நவ.28) ராமேஸ்வரத்தில் இருந்து ஓகாவுக்கு இயக்கப்படவிருந்த ரயிலும், மறுமார்க்கத்தில், டிச.02- ல் ஓகாவில் இருந்து ராமேஸ்வரம் இயக்கப்படவிருந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள், சேலம் வழியாக இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


