News March 25, 2025

சேலத்திற்கு மெட்ரோ ரயில் வருமா? 

image

சேலத்திற்கு மெட்ரோ ரயில் வருமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோவை, மதுரை, திருச்சியில் மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மெட்ரோ ரயில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சேலத்திலும் மெட்ரோ ரயில் விடுவது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News October 18, 2025

கார் கவிழ்ந்த விபத்தில் சேலம் தம்பதி உயிரிழப்பு!

image

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (58); வெள்ளி வியாபாரி. இவரது மனைவி கவிதா (49). இவர்கள், நேற்று காலை தங்களுக்கு சொந்தமான காரில், சேலம் – அரூர் தேசிய நெடுஞ்சாலையில், அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காலை, 8:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்தகார், இருளப்பட்டி கானியம்மன் கோவில் எதிரே தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கணவன் -மனைவி இருவரும் உயிரிழந்தனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை!

News October 18, 2025

விவசாயிகளுக்கான மானியம் ஆட்சியர் தகவல்

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை விளைப் பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார் சேலத்திற்கு ரூபாய் இரண்டு கோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் (http://www.agrimark.in.gov.in/)இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்

News October 18, 2025

சேலம்:வாலிபருடன் பழகிய மனைவி கொலை!

image

சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரதிதேவி (28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது ரதிதேவி, தான் வேலை பார்க்கும் இடத்தில் ஒருவருடன் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், வீட்டில் இருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாகக் குத்தினார். இதில் ரதிதேவி உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் கண்ணனைப் கைது செய்து விசாரணை

error: Content is protected !!