News August 9, 2024
சேலத்திற்கு புதிய போலீஸ் அதிகாரிகள்

தென் சேலம் துணை ஆணையர் மதிவாணன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக பெரம்பலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் எஸ்பியான வேல்முருகன் எஸ்பியாக பதவி உயர்வுபெற்று துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆவடி ஆணையரக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் எஸ்பியான கீதா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சேலம் தலைமையிடத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 9, 2025
சேலம்: WhatsApp மூலம் பணம் பறிபோகலாம்!

சேலம் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 9, 2025
சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தி குத்து!

சேலம், சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார், இவர் கல்குவாரி உரிமையாளர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இது தெரிய வந்ததும், அந்த பெண்ணின் கணவர் சசிகுமாரை மிரட்டி, கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சசிகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 9, 2025
இணைய மோசடிகள் குறித்த புகாருக்கு 1930 அழைக்கவும்!

இணையவழி மோசடி மற்றும் நிதிசார் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எந்தவொரு இணையவழி சைபர் குற்றத்திற்கும் இரையாகினால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என சேலம் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.


