News May 16, 2024
சேத்துப்பட்டு அருகே விபத்தில் ஒருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வேம்புகண்ணு என்பவர் நேற்று மாலை போளூர் சேத்பட் சாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி பலத்த காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 6, 2025
தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு (ஜூலை 6) இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை இரவு ரோந்துக்கு தாலுக்கா வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உங்கள் தாலுக்கா அதிகாரி அழைக்கலாம் மற்றும் 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
தி.மலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் ஸ்ரீ அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் வரும் ஜூலை 10, வியாழக்கிழமை காலை 2.26 மணிக்கு தொடங்கி ஜூலை 11, வெள்ளிக்கிழமை காலை 3.11 மணிக்கு முடிவடையும் என்று ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.