News May 16, 2024
சேத்துப்பட்டு அருகே விபத்தில் ஒருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வேம்புகண்ணு என்பவர் நேற்று மாலை போளூர் சேத்பட் சாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி பலத்த காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
தி.மலை: AIRPORT-ல் வேலை! APPLY NOW

தி.மலை மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 -ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <
News November 28, 2025
திருவண்ணாமலையில் கனரக வாகனங்களுக்கு தடை

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை வழியாக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை டிசம்பர் 1 ஆம் தேதி காலை 8 மணி முதல் டிசம்பர் 5 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 28, 2025
தி.மலை: HELLO போதும்; A-Z தெரிந்துவிடும்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 2 முதல் 5 வரை 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 130 கார் பார்க்கிங் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் WhatsApp எண் 9487851015-க்கு “Hello” அனுப்பி Google Map இணைப்பைப் பெறலாம். உதவிக்கு 24 மணி நேர காவல் உதவி எண்கள்: 9498100431, 7904117036, 100, 9150534600, 7695878100. ஷேர் பண்ணுங்க.


