News May 7, 2025
செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 27, 2025
செங்கல்பட்டு: பைக் திருடிய இருவர் கைது

குரோம்பேட்டை குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் பவுல் ஜோசப் என்பவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருட்டில் ஈடுபட்ட குரோம்பேட்டையை சேர்ந்த மதன் (20) மற்றும் அவரது நண்பர் சண்முகம் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News November 27, 2025
செங்கல்பட்டு: சிறப்பு ரயில் அறிவிப்பு!

திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் டிச. 3ம் தேதி தாம்பரம் – திருவண்ணாமலை- தாம்பரம் இடையே முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் படி தாம்பரத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1:30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும், மறுமார்க்கமாக மாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
News November 27, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


