News May 7, 2025
செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை, துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்…
Similar News
News November 28, 2025
திருப்பத்தூரில் மின்தடை அறிவிப்பு!

திருப்பத்தூர் மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு நாளை (நவ.29) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருப்பத்தூர், கந்திலி, புது பெட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது. மின்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மேம்பாட்டு பணிகள் காரணமாக திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையான முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டு.
News November 28, 2025
திருப்பத்தூர் தேர்வர்களே தெரிந்து கொள்ளுங்கள் – தேதி மாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் ‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (நவ.29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு, டிசம்பர்.6-ம் தேதி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கம் இன்று (நவ.28) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு எழுதும் திருப்பத்தூர் மாணவர்கள் இந்த அறிவிப்பினை தெரிந்து கொள்ளுங்கள் உடனே மற்ற மாணவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ-28) “உனது பாதுகாப்பு உன் கையில் பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவதை மறவாதீர்…! என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.


