News April 25, 2025

செல்போன் பேசினால் லைசென்ஸ் காலி!

image

கடந்த மூன்று மாதத்தில் சேலம், தருமபுரியில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 233 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 146 ஓட்டுநர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.

Similar News

News September 18, 2025

சேலம்: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

image

சேலம் மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

News September 18, 2025

சேலம்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News September 18, 2025

சேலம் மாவட்டத்தில் 55 போலீசார் இடம் மாற்றம்!

image

சேலம் மாவட்டக் காவல்துறையின் ஆத்தூர் தலைமை இடத்திலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய காவலர்கள் மீது தொடர் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 55 காவலர்களை பணியிட மாற்றம் செய்து சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் உடனடியாக அந்தந்த காவல் நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தல்

error: Content is protected !!