News June 26, 2024
செல்போன் எண்ணை கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் முறைப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனிடையே நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மக்களுக்கு சேவையாற்றி வசதியாக செல்போன் 81110 01999 என்ற செல்போன் எண்ணையும் vsmatheswaranofficial@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளார். இது அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.
Similar News
News December 1, 2025
அசால்டாக அசத்திய நாமக்கல் முதியவர்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கரூரில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சங்கிலி குண்டு எறிதல், வட்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியில், நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த கரசப்பாளையத்தை சேர்ந்த சிவசாமி முதல் பரிசை பெற்றார். அவருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
News December 1, 2025
நாமக்கல்லில் பள்ளத்தில் ஆண் பிணம் அதிர்ச்சி!

நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முதலைப்பட்டி-நல்லிபாளையம் சர்வீஸ் சாலையில் நேற்று காலை சுமார் 50 வயது ஆண் ஒருவர் நெடுஞ்சாலைக்கும் சர்வீஸ் சாலைக்கும் இடையேயுள்ள பள்ளத்தில் தலையில் காயமடைந்து இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். மேலும் தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
திருச்செங்கோடு அருகே தீயில் கருகி பலி!

திருச்செங்கோடு அருகே வண்ணான்காடு பகுதியை சேர்ந்த பாவாயி (75) தனியாக குடிசையில் வசித்தார். நேற்று முன்தினம் இரவில் அவரது குடிசையில் தீப்பிடித்து எரிந்ததில் அவர் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மகள் அருனிசா போலீசுக்கு தெரிவித்தார். திருச்செங்கோடு போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, இது விறகு அடுப்பு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பதை போலீசார் உதயகுமார் விசாரித்து வருகின்றார்.


