News April 16, 2024
செமஸ்டர் கட்டணம் செலுத்த கால அவகாசம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ஆன்லைனில் பல்கலை. செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த எவ்வித பிரச்சனைகளும் இல்லை. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான பாடப்பிரிவுகள் இணையதளத்தில் பதியவில்லை என தெரியவந்துள்ளது. விடுபட்ட அந்த பாடப்பிரிவுகளை இணையதளத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த மேலும் 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றார்.
Similar News
News December 8, 2025
நெல்லையில் இங்கெல்லாம் மின் தடை!

சிவந்திபட்டி, பழைய பேட்டை, கூடங்குளம், வள்ளியூர், திசையன்விளை, கோட்டை கருங்குளம்,களக்காடு, பொருட்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச 9) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. குத்துக்கல், டவுன், வாகைகுளம், இடிந்தகரை, இருக்கன்துறை, ஏர்வாடி, அப்பு விளை, குமாரபுரம், முடவன் குளம், மாவடி, குறுக்குத்துறை இதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மனி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.
News December 8, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.7) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.