News August 27, 2024

செப்.1ல் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

image

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் செப்.1ஆம் தேதி ஆற்காடு வேப்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில், அமைச்சர் காந்தி, எம்.பி. ஜெகத்ரட்சகன், இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரப்பன், மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி, சுற்றுச்சூழல் மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, பலர் கலந்து கொள்கின்றனர். திமுக முப்பெரும் விழா குறித்து ஆலோசனை நடக்கிறது என அமைச்சர் காந்தி அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 26, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News November 26, 2025

ராணிப்பேட்டையில் வாக்காளர் உதவி மையங்கள் ஆய்வு

image

ராணிப்பேட்டை ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் டாக்டர் ஜே.யு.சந்திரகலா (நவ.26) ராணிப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்ட வாக்காளர் உதவி மையங்களை ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், வாக்காளர் விண்ணப்பங்களை எளிதில் பெற உதவி மையங்கள் செயல்படுவதைப் பரிசோதித்து தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

News November 26, 2025

ராணிப்பேட்டை: ஒரு நொடியில் உங்கள் பட்டா விவரங்கள் அறியலாம் !

image

ராணிப்பேட்டை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். <>அல்லது TamilNilam<<>> என்ற செயலி மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!